பொதுவாக ஒரு திரைப்படத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடிப்பது வழக்கம் தான். ஆனால் இந்த படத்தில் நாயகியின் கேரக்டரும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி அந்த கேரக்டர்களில் ஒன்றி அபர்ணா பாலமுரளி நடித்து ஒரே படத்தில் பெரும் புகழ்பெற்றார். இதனால் சூர்யாவுக்கு இணையாக அபர்ணாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்தது.
இதையடுத்து இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. மேலும் அபர்ணாவை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இப்போதெல்லாம் அவரை குறித்த எந்த ஒரு செய்தி வெளியானாலும் அது வைரலாகிவிடுகிறது . அந்த வகையில் தற்ப்போது அபர்ணா நிகழ்ச்சி ஒன்றில் மெல்லிய குரலில் பாடல் பாடி அசத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.