கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவை ஒல்லியாக்கும் ஏ எல் விஜய்!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:11 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார்.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் ராணுவக் கதையை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் அனுஷ்காவின் உடல் எடை குறையாததால் இந்த படத்தில் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலமாக ஒல்லியாக மாற்றிக் காட்ட உள்ளாராம் இயக்குனர் ஏ எல் விஜய்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்