93 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்து முடிந்தது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை தி பாதர் படத்துக்காக ஆண்டனி ஹாப்கின்ஸ் பெற்றார். இது அவர் பெறும் இரண்டாவது ஆஸ்கர் விருதாகும். ஏற்கனவே தி சைலன்ஸ் ஆப் தி லாம்ப் படத்துக்காக அவர் விருது பெற்றுள்ளார். 83 ஆவது வயதில் ஆஸ்கர் பெற்றிருக்கும் ஹாப்கின்ஸ், இதன் மூலம் அதிக வயதில் விருது பெற்ற நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோன் தனது 87 ஆவது வயதில் ஆஸ்கர் பெற்று அதிகவயதில் ஆஸ்கர் வாங்கிய கலைஞர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.