மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்-விக்னேஷ் சிவன்

புதன், 5 ஜூலை 2023 (21:41 IST)
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வசூல் குவித்து வரும் நிலையில் இப்படத்திற் அரசியல் தலைவர்கள், சினிமா  பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் நேர்மறையாக  விமர்சனங்கள்  கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த  இயக்குனவர் விக்னேஷ் சிவன் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’மாரி செல்வராஜின்  கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்!

வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்
முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில்
முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார்  இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில்
அவரது நேர்மை வெளிப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

மாரி செல்வராஜின் @mari_selvaraj கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! #MAAMANNAN

வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்

முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி… pic.twitter.com/ZFhslzy7oK

— VigneshShivan (@VigneshShivN) July 5, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்