என் பெயரை தவறாகப் பயன்படுத்தி நடிகைகளிடம் பேசுகிறார்கள் – அல்போன்ஸ் புத்திரன் கருத்து!

ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:56 IST)
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பெயரைப் பயன்படுத்தி மர்மநபர்கள் நடிகைகள் மற்றும் திரைத்துறையினரிடம் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். ’பாட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இந்த படம் ஒரு இசை சம்பந்தமான படம் என்றும் அல்போன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அவரே இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமுகவலைதளத்தில் அல்போன்ஸ் புத்திரன் ‘தனது பெயரை சொல்லி ஒரு ஆணும் பெண்ணும் திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் பேசுகிறர்கள். அந்த எண்ணுக்கு நான் அழைத்தால் அவர்கள் என்னிடமே நான் அல்போன்ஸ் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள். அதனால் 9746066514’, ‘9766876651’ இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் ஏமாந்துவிடவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்