ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்ததாகவும் ஆனால் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று ரஜினிகாந்த் பிடிவாதக கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை டிராப் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை.
இந்நிலையில் இப்போது லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இயக்குனர் சிவாவும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ரஜினி இருக்கும் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளனர். மேலும் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.