அண்ணாத்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் அப்டேட்!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:46 IST)
ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஓடு நேரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அண்ணாத்த படத்தின் சென்ஸார் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் இப்போது படத்தின் ரன்னிங் டைம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. படம் 2.45 மணிநேரம் ஓடும் விதமாக படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்