’’இது வேத வாக்கு...’’அண்ணாத்த படத்தின் டிரைலர் ரிலீஸ்

புதன், 27 அக்டோபர் 2021 (18:21 IST)
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில்  தற்போது அண்ணாத்த படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது. ரஜினி படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பஞ்ச் வசனங்கள் இப்படத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக  இப்படம் அமையும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்