அண்ணாத்த டப்பிங்கில் பங்கேற்கும் கலைஞர்கள்… வெளியான புகைப்படம்!

புதன், 4 ஆகஸ்ட் 2021 (10:08 IST)
ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து ஒரு வழியாக முடிந்துள்ளது. இப்போது படப்பிடிப்பு எல்லாம் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் தன் சம்மந்தமான பணிகள் எல்லாவற்றையும் முடித்த நிலையில் இப்போது மற்ற நடிகர் நடிகைகள் டப்பிங்கை தொடங்கியுள்ளனர்.

மீனா மற்றும் நடிகர் சதீஷ் ஆகியோர் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்