ஹீரோயினே தோத்துப்போயிட்டாங்க... ஸ்லிம்ஃபிட் போட்டோக்களுக்கு செம லைக்ஸ்!

திங்கள், 11 அக்டோபர் 2021 (12:31 IST)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் எடை அதிகரித்து பருமனான அஞ்சனா ஒர்க் அவுட் செய்து எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகியாக மாறிவிட்டார். தொடர்ந்து ஹீரோயின்களே தோற்றுப்போகும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஒல்லிக்குச்சி உடம்பு காட்டி கிக்கு ஏத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்