என் டி ஆர் 30 படத்தில் அனிருத் & ஆலியா பட்!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:19 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு என் டி ஆர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

என் டி ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்துள்ள ஆர் ஆர் ஆர் படம் கொரோனா மூன்றாம் அலை காரணமாக ரிலிஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என் டி ஆர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் என் டி ஆர் 30 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தின் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட்டும் இசையமைப்பாளராக அனிருத்தும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஏற்கனவே ஆலியா பட் ஆர் ஆர் ஆர் படத்திலும் ஜூனியர் என் டி ஆரோடு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்