டீனேஜ் வயசுல வாலிப வட்டத்தை வசீகரிக்கும் அனிகா - கியூட் லுக்!

வியாழன், 1 ஜூன் 2023 (21:59 IST)
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். 
 
அவர் தற்போது ஹீரோயினாகவே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது அழகான உடையில் எடுத்துக்கொண்ட பியுட்டிபுல் போட்டோக்களை வெளியிட்டு வாலிப வட்டத்தை வசீகரித்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்