ஷாலினியை காதலிப்பதற்கு முன்னரே வேறு நடிகையை பெண் கேட்டு சென்ற அஜித்!

புதன், 31 மே 2023 (17:46 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் இதுவரை யாருக்கும் தெரியாத அஜித்தை பற்றிய ரகசியம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், நடிகர் அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன்னரே வேறு நடிகை ஒருவர் மீது காதல்வயப்பட்டு அவரை பெண்கேட்டு சென்றாராம். 
 
அது வேறு யாரும் இல்லை 1996 ஆம் ஆண்டு வெளியான வான்மதி படத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த சுவாதி தானாம். அவரை ஒருதலையாக காதலித்து பெண் கேட்டு சென்ற அஜித்தை ஸ்வாதியின் அம்மா திட்டி அனுப்பியதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்