அரவிந்தசாமி படத்தில் ஆண்ட்ரியாவுக்கு என்ன வேலை?

வியாழன், 16 நவம்பர் 2017 (00:39 IST)
நடிகர் அரவிந்தசாமி, அமலாபால் நடித்து வரும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மம்முட்டி, நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் தற்போது ஆண்ட்ரியா இணைந்துள்ளார்


 


ஆண்ட்ரியாவுக்கு இந்த படத்தின் என்ன கேரக்டர் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை, அதற்கு பதிலாக அமலாபாலுக்காக ஒரு பாடலை பாடியுள்ளார். அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா பாடிய பாடல் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் வரும் 30ஆம் தேதி சிங்கிள் டிராக்காக வெளியாகவும் உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதேபோல் இதே படத்தில் பாடகர் க்ரிஷ் பாடிய ஒரு பாடலும் இன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தின் மாஸ் பாடல் என்று கூறப்படும் இந்த பாடலை அரவிந்தசாமிக்காக முதன்முதலாக பாடியுள்ளதாக க்ரிஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

அரவிந்தசாமி, அமலாபால்,  நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் மற்றும் தெறி' பேபி நைனிகா நடிக்கும் இந்த படத்தில் நிகிஷா பட்டேல் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்திக் இயக்கி வருகிறார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்