பிரபல யூடியூப் சேனலில் நடிகை ஆண்ட்ரியாவின் நேர்காணல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் பேட்டி கண்டவர் ஆண்ட்ரியாவை வரவேற்கும் போது "நானும் எல்லோரையும் போலத்தான் உங்களை காதலுடனும் இச்சையுடன் பார்த்திருக்கிறேன். இன்று உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்கிறேன்" என கூறியுள்ளார். அது மட்டுமின்றி ஆண்ட்ரியா நடித்த பச்சைகிளி முத்துச்சரம் போன்ற சில படங்களின் கேரக்டர் பற்றியும் அவர் பேசினார்.