வேலை நாட்களிலும் டீசண்ட்டான கலெக்‌ஷன்… பிரசாந்தின் அந்தகன் வசூல் விவரம்!

vinoth

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (10:06 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸானது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்து, சில ஆண்டுகள் காத்திருந்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார்கள். அந்த  நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் மூன்று நாட்களில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த திரைப்படம் இரண்டாவது வாரம் வேலை நாளான நேற்று 35 லட்ச ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதே வசூல் தொடரும் பட்சத்தில் இந்த வாரத்தின் முடிவில் 10 கோடி ரூபாய் வசூலை தொட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்