ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு டிரைலர்… வேல் படத்தின் அட்ட காப்பியா!

திங்கள், 20 டிசம்பர் 2021 (11:10 IST)
ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள அன்பறிவு படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படம் சமீபத்தில் ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த படத்துக்கு முன்பே அவர் நடித்திருந்த ‘அன்பறிவு’ என்ற திரைப்படம் இப்போது ஓடிடி ரிலிஸுக்கு தயாராகியுள்ளது. நெப்போலியன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் இந்த படத்தை இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.ஜனவரி 7 ஆம் தேதி நேரடி ஓடிடி வெளியீடாக இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. டிரைலரைப் பார்த்த பலரும் இது சில வருடங்களுக்கு முன்னர் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய வேல் படம் போலவே இருப்பதாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்