ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

சனி, 14 ஜூலை 2018 (09:51 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது. சமீபத்தில் தான் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி சென்னை திரும்பினார்.
 
இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. 
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினர் ஆப்டான நடிகரை தேடி வந்ததாகவும், அதற்கு சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தான் சரியானவர் என படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆகவே ரஜினியுடன் ஃபஹத் ஃபாசில் நடிக்கப்போகிறார். இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர தகவல் வெளியாகவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்