தமிழ் ரசிகர்களுக்கு எமி ஜாக்சன் என்றால் முதலில் நினைவிற்கு வருவது மதராசப்பட்டினம் திரைப்படம். அந்த படத்தில் தனது அழகும் திறமையும் நிரூபித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான ஐ, விஜய் நடித்த தெறி உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.
முன்னதாக, ஜார்ஜ் பனாயியோடௌவை திருமணம் செய்துகொண்ட எமி, அவருடன் பெற்றெடுத்த குழந்தையின் மகிழ்ச்சியை அனுபவித்தார். ஆனால், சில கருத்து வேறுபாடுகளால் அவர்கள் 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு, ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் உறவில் இருந்து கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். தற்போது, அவர் இரண்டாவது முறையாக தாயானதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.