பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின் இப்போது சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறார். இந்நிலையில் வரப்பிரசாத் என்பவர் இயக்கிய ஒரு புதிய படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
சில வாரங்களுக்கு முன்னர் அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. படத்துக்கு லிப்ட் என்ற வித்தியாசமான பெயரை சூட்டியிருந்தனர். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் நடித்திருந்தார். ஆனால் அவரது கதாபாத்திரத்துக்கு வேறொருவரை வைத்து டப்பிங் பேசவைத்துள்ளரனாம் படக்குழுவினர். இதனால் கடுப்பான அமிர்தா ‘நான் ஒரு தமிழ் பொண்ணு என்னால தமிழ்ப் படத்துக்கு டப்பிங் பேச முடியாதா?’ என கொந்தளித்துள்ளாராம்.