அமிதாப் குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நால்வருக்குமே இலேசான அறிகுறிதான் என்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் இன்று அமிதாப் பச்சம் தான் குணமடைந்துவிட்டதாக தனக்காக பிரார்த்தித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.