அமீர்கான் இப்போது லால் சிங் சட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப்பின் ரீமேக்காகும். இந்நிலையில் இந்த படத்துக்குப் பின் அமீர்கான் டிசீரிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமார் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளார். கொரோன காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் தொடங்கும் என குஷால் குமாரின் மகன் பூஷன் குமார் தெரிவித்துள்ளார்.