தனுஷ் 50 படத்தில் இணைந்த அமலா பால்?... லேட்டஸ்ட் தகவல்!

சனி, 24 ஜூன் 2023 (10:21 IST)
பவர் பாண்டி படம் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்த தனுஷ், அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா,  காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படத்தை முடித்ததும் இந்த படத்தை தனுஷ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தில் அமலா பால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வேலையில்லாத பட்டதாரி 1 மற்றும் 2 ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்