தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்துக்கான நடிகர் நடிகைகள் தேடும் படலம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் கவின் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. இதுபற்றி இப்போது கவின் விளக்கம் அளித்துள்ளார். அதில் “சஞ்சய் என்னை சந்தித்து கதை சொன்னார். மேலும் சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்றார். ஆனால் அதன் பிறகு அவர் தரப்பில் இருந்து யாரும் என்னை தொடர்புகொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.