சித்ரா பௌர்ணமி நாளில் சிவசக்தி வழிபாட்டு பலன்கள் !!

சித்ராபௌர்ணமி சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில், சந்திரபகவான், தம் பூரண கலைகளுடன் பிரகாசிக்கிறார். பூமிக்கு மிக அண்மையில் அன்று சந்திரபகவான் இருக்கிறார். 

ஆகவே, அன்றைய தினத்தில், இறைவழிபாடு செய்வது மிக அதிக நற்பலன்களைப் பெற்றுத் தரும். சித்ரா பௌர்ணமி சித்திரை மாதம் ஏற்படுகிறது. அப்போது சூரியன் தனது உச்ச வீட்டில் பலம் பெற்று நிற்பார். 
 
புராணக்கதை: யமதர்மராஜர், தம் பணியின் கடுமை காரணமாக, தமக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என சிவனாரிடம் பிரார்த்தித்தார். அந்த வேண்டுகோளை ஏற்று, சிவனார், சூரிய தேவனின் மனதை மாயையில் ஆழ்த்தினார். அதன் விளைவாக, வானவில்லின் ஏழு நிறங்களும் சேர்ந்த உருவமான, நீனாதேவி என்ற பெண்ணைக்  கண்டு சூரியபகவானுக்கு காதல் ஏற்பட்டது. இவ்விருவருக்கும் தோன்றிய புதல்வனே சித்ரகுப்தர். அவர் தோன்றும் பொழுதே, ஏடு மற்றும் எழுத்தாணியுடன்  தோன்றினார். காஞ்சியில், சிவபெருமானைக் குறித்து, கடும் தவம் இருந்து அஷ்ட மா சித்திகளும் அடைந்தார் சித்ரகுப்தர்.  
 
தனிக் கோயில்:
 
அதன் பின், இறைவனின் ஆணையின் பேரில், யமதர்மராஜருக்கு கணக்காளராக இருந்து, ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு வருகிறார். இதன் காரணமாக, சித்ரகுப்தருக்கு, காஞ்சியில் தனிக் கோயில் இருக்கிறது.  
 
சூரியன் சிவனின் அம்சமும் சந்திரன் சக்தியின் அம்சமும் ஆவர். எனவே சித்ரா பௌர்ணமி நாளில் சிவசக்தி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்