ராமாயணத்தைப் படமாக்கும் திட்டம் கைவிடப்படவில்லை… அல்லு அர்ஜுன் உறுதி!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (14:45 IST)
அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் அவர் ராமாயணத்தைப் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது.

குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.  இதனால் இப்போது இந்தியா முழுவதும் அறியப்படும் நபராகி உள்ளார் அல்லு அர்ஜுன். இந்த படத்தின் வெற்றி மூலம் இப்போது பேன் இந்தியா ஹீரோவாகியுள்ளார் அல்லு அர்ஜுன்.

இந்நிலையில் அவர் முன்பு அறிவித்திருந்த ராமாயணம் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். அதில் “அந்த படத்தை நாங்கள் கைவிடவில்லை. இப்போதும் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 6 மாதத்துக்குள் முடியும். முன்பை விட இப்போது பட்ஜெட் அதிகமாகி 500 கோடியை தாண்டி செல்லும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்