ஆர்.ஆர்.ஆர் படத்தின் மீது அதிருப்தியா? ஆலியா பட் விளக்கம்

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:52 IST)
சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் குறித்து ஆலியாபட் எதிர்மறை கருத்து தெரிவித்ததாக விமர்சனம் எழுந்த நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில்       ராஜமவுலி  இயகக்த்தில்,  ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியாபட், ஸ் ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். 

இந்நிலையில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ஆலியா பட்டின் காட்சிகள் இப்படத்தில் மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்து எஸ்எஸ் ராஜமவுலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அன்ஃபாலோ செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

இ  ந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தின் தன்னுடைய கதாப்பாத்திரம் சில இடங்களில் மட்டுமே இடம்பெற்றது எனவும், இதனால் அதிருப்தியடைந்த ஆலியா பட், தன் சமூகவலைதளப் பக்கத்தில், ஆர்ஆர் ஆர் படம் குறித்து பகிர்ந்து அவர் பதிவிட்ட அத்தனை கருத்துக்களையும் நீக்கிவிட்டதாக சமூகவலைதளத்தில் நெட்டிசங்கள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆலியாபட் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழு மீது எனக்கு இருந்த அதிருப்தியால் அப்படம் குறித்த எனது கருத்துகளை சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியது.இதை வைத்து யாரும் வீண் வந்ததிகளைப் பரப்ப வேண்டாம்.  நான் எப்போதும் என் முந்தைய பதிவுகளை மாற்றியமைப்பது வழக்கமான ஒன்றுதான்.ஆர்.ஆர்.ஆர் . படத்தில் இடம்பெற்ற சீதா கதாப்பாத்திரத்தை நான் விரும்பி நடித்தேன். இப்படத்திற்காக படக்குழு பல ஆண்டுகள் உழைத்துள்ளனர். இப்படம் குறித்த தவறான தகவல்களை  நான்  மறுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்