கொலைக்கான காரணம் என்ன என விசாரிப்பதற்குள் இன்னொரு கொலை, மீண்டும் இன்னொரு கொலை என மூன்று கொலை நடக்கிறது. இந்நிலையில் கொலைப்பழி மொத்தமும் பிரஜினின் மீது விழுகிறது. 'நடக்கும் கொலைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை பிரஜின் எடுத்துச் சொன்னாலும் போலீஸ் தரப்பில் நம்ப மறுப்பதால், ஓடி ஒளிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.
பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. திரைப்பட எடிட்டராக வரும் பிரஜன் அருமையான நடிப்பை வெளிப்படத்தி உள்ளார்.படத்தின் இயக்குனர் ஸ்டாலின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதையோட்டத்துக்கு தேவையான பின்னணி இசையை தந்திருக்கிறார் சதீஷ் செல்வம். மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.