ரஜினியின் இந்தப் படத்தை ’’ரீமேக் ’’செய்ய ஆசைப்பட்ட அஜித்

புதன், 22 ஜூலை 2020 (16:09 IST)
மறைந்த இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் ஜானி,. இப்படத்தில் ஸ்ரீதேவி சுருளி ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில், நடிகர் அஜித்திற்கு ஜானி படம் மிகவும் பிடித்துப்போய் அதைப் பற்றி என் தந்தையிடம் இதை நீங்கள் ரீமேக்  செய்வதாக இருந்தால் நான் நடிக்கிறேன் என்று கூறியதாகக் கேள்விப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்

ஆனால் அப்பாவுக்கு முள்ளும் மலரும் உள்ளிட்ட எந்தப் படத்தையும்  ரீமேக் செய்யப் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்