தென்னிந்திய அளவில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மிகவும் பிரபலமானவர். இவர் இதுவரை நான்காயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார். பல பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் இவரிடம் நடனம் கற்றவர்கள் தான்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கலா மாஸ்டர், நடிகர் அஜித் ஒரு சிறந்த மனிதர். அவர் நடனம் கற்க எனது வீட்டிற்கு வருவார். அப்போது தினமும் என் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று நடனம் பயின்றார். அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்றார்.