அஜித் சார் சொன்னது நிரூபணம் ஆனது - இயக்குநர் சிவா

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (13:05 IST)
விவேகம் படம் வெளியான சில நாட்களில் அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக இருந்தது. ஒருவர் படத்தை தரக்குறைவாக பேசியது பற்றி சினிமா துறையில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

 
இயக்குநர் சிவா, படத்தை பற்றி "தரக்குறைவாக பேசியவர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு  நல்ல படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. கிளைமாக்ஸ் சீனில் வந்த பாடல் பற்றி கேட்டபோது, "எல்லாமே எல்லாருக்கும் பிடிக்கும்னு நாம் சொல்லமுடியாது, சிலருக்கு பிடித்தது சிலருக்கு அது பிடிக்கவில்லை" என கூறினார்.
 
உண்மையான உழைப்பு தோத்ததாக சரித்திரம் இல்லைனு அஜித் சார் சொன்னாரு. அது இப்போ நிரூபணம் ஆகிட்டு வருது  என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்