நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்த தவறிய மாநில அரசு மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருதரப்பு விவாதங்கள் முடிந்த பின்னர் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை இனியும் காலம் தாழ்த்தினால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேறிடும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.