சென்னைக்குத் திரும்பும் அஜித்

சனி, 6 மே 2017 (12:46 IST)
படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருக்கும் அஜித், சென்னை திரும்புவது எப்போது எனத் தெரியவந்துள்ளது.
 

 
சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில்தான் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, பல்கேரியாவில் படமாக்கி வருகிறார் சிவா.

இந்நிலையில், படப்பிடிப்பு முடியும் தருவாய்க்கு வந்திருக்கிறது. மே 11ஆம் தேதியுடன் ஷூட்டிங் முடிகிறது. எனவே, 12 அல்லது 13ஆம் தேதி அஜித் சென்னைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கலாம். மே 11ஆம் தேதி ‘விவேகம்’ படத்தின் டீஸர் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்