அஜித்தின் விடாமுயற்சி படத்தில் லியோ வில்லன்? லேட்டஸ்ட் தகவல்!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:44 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

ஷூட்டிங் தொடங்கும் நாளுக்காக காத்திருந்து காத்திருந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி வலிமை அப்டேட் போல விடாமுயற்சி அப்டேட்டை செல்லும் இடமெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையடுத்து நாளுக்கு ஒரு அப்டேட்டாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 மற்றும் லியோ ஆகிய படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்