விக்னேஷ் சிவனுக்கு அஜித் தரப்பில் இருந்த வந்த அறிவுரை- அஜித் 62 பட அப்டேட்!

வியாழன், 29 டிசம்பர் 2022 (08:41 IST)
நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த படத்துக்கான திரைக்கதை பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “இந்த படத்துக்காக அஜித் தரப்பில் இருந்து வந்த அறிவுரை என்னவென்றால், எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் ஸ்டைலில் ஒரு கதை பண்ணுங்கள் என்பதுதான்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்