நாம் ஏற்கனவே கூறியபடி 57 வினாடிகள் ஓடும் இந்த டீசரில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் தான். ஹெலிகாப்டர்களின் வர்ணஜாலம், பனிமலையில் துப்பாக்கி சூடு, அஜித்தின் தெறிக்க வைக்கும் ஸ்டைல், 'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை யாராலும் ஜெயிக்க முடியாது' என்ற பஞ்ச் டயலாக், முழுக்க முழுக்க வெளிநாட்டின் பிரமாண்டமான லொகேஷன் ஆகியவை கண்களுக்கு விருந்தளிக்கின்றன
ஆனாலும் காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர்களை ஒரே ஒரு ஷாட்டாவது காண்பித்திருக்கலாம் என்ற குறை மனதில் எழுகிறது. ஆனால் முழுக்க முழுக்க அஜித்தை பார்க்கும்போது மனம் நிறைந்து காணப்படுகிறது