அஜித்தின் ‘வலிமை’ திரையரங்கு ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள்!

செவ்வாய், 30 மார்ச் 2021 (06:47 IST)
அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரம் சம்பந்தமான முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார் 
 
‘வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ரோமியோ பிக்சர்ஸ் என்பது ஏற்கனவே அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ‘வலிமை’ படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பெற்றுக் கொள்ளவும் இதுவரை அஜித் படங்கள் செய்யாத வியாபாரம் இந்த படத்தில் நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் 50வது பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்