அஜித்தின் துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல் ரிலீஸ்!

ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (14:14 IST)
அஜித்தின் துணிவு படத்தின் ’காசேதான் கடவுளடா’ பாடல் ரிலீஸ்!
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடிய இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை வைசாக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது 
 
ராப் பாடல் போல் அமைந்துள்ள இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சில்லா சில்லா பாடல் போலவே இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் இணையதளங்களில் இந்த பாடல் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்