’ஏகே 61’ படத்தின் ஹாங்காங் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்!

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (19:19 IST)
அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹாங்காங் நாட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் ’ஏகே 61’  படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும், அஜித், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு முன்னரே ஒரு சில தொழில்நுட்ப பணிகள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
நவம்பர் மாதம் வரை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது 
 
எச் வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்