தனி விமானத்தில் ஐதராபாத் பறந்த அஜித் – AK 61 லேட்டஸ்ட் அப்டேட்!

சனி, 28 மே 2022 (09:23 IST)
நடிகர் அஜித் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. அதற்காக போடப்பட்ட வங்கி செட்டில் H வினோத் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதையடுத்து இப்போது ஐதரபாத்திலேயே இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள தொழிற்சாலையில் இப்போது படத்தின் காட்சிகளை வினோத் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து அஜித் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சமம்ந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்