வெளிநாடுகளில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிய நிலையில் சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்து சில காட்சிகளை எடுத்து வருகின்றனர். இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஆகியோர் நடிக்கின்றனர். வில்லனாக இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார்.
அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தை ஜுன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்திற்கு வதம் அல்லது விவேகம் என்று பெயர் வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. படத் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 2ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி அன்று வெளியிடாவிட்டால் அவற்றை என்று வெளியிடுவார்கள் என்று அறிவிப்பார்களாம்.