அஜித் நடிப்பில் ஒரு வருடத்துக்கும் மேலாக உருவாக்கத்தில் இருக்கும் வலிமை படத்தின் ஒரே ஒரு போஸ்டர் கூட இன்னும் வெளியாகவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடி வரை வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்தனர். இதனால் மனமிறங்கிய அஜித்தும் தயாரிப்பாளரும் மே 1 ஆம் தேதி முதல் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.