அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு, இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தெரிவித்துள்ளது. எனவே, அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள், 6 மணிக்காகக் காத்திருக்கின்றனர்.