சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பம் நான்கு மொழிகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக நேற்று தன்னுடைய சமூகவலைதளத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவர் படத்தின் தலைப்பாக ஓ சாத்தி ச்சால் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை தமிழில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.