காக்கா முட்டை படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்தன… ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த தகவல்!

வெள்ளி, 7 ஜூலை 2023 (07:41 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படங்கள் பர்ஹானா மற்றும் தீராக் காதல் கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் “நான் காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்த பின்னர் தமிழ் சினிமாவில் பெரும்பாலானவர்கள் தொடர்புகொண்டு பாராட்டினார்கள். ஆனால் எனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி தவிர பெரிய ஹீரோக்கள் எனக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

அதன் பின்னர் நான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.பெண் மைய கதாபாத்திரத்தில் நடிப்பதால் பெரிய ஹீரோக்கள் இப்போதும் என்னை அழைப்பதில்லை என நினைக்கிறேன்.  அதற்காக நான் கவலைப்படுவதுமில்லை. இப்போது என் படங்களில் நானே ஹீரோவாக இருக்கவேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்