நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் அர்ஜுன் தாஸோடு இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர, இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் இருப்பது வெறும் நட்புதான் எனக் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஒரு நேர்காணலில் தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் ரிலீஸான பொன்னியின் செலன் 2 படத்தில் அவருக்கான காட்சிகள் குறைவாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.