விரைவில் சம்மந்தி ஆகப்போகும் நடிகர்கள் அர்ஜுனும் தம்பி ராமையாவும்!.. லேட்டஸ்ட் தகவல்!

ஞாயிறு, 25 ஜூன் 2023 (08:32 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இப்போது பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்