இனி ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து தேவையில்லை.. பாடல் கம்பேஸ் கொடுக்கும் ஏஐ டெக்னாலஜி..!

Siva

செவ்வாய், 18 மார்ச் 2025 (13:49 IST)
ஒரு திரைப்படத்திற்காக பாடல் கம்போஸ் செய்வதற்கு, இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்கள் தேவை. ஆனால், இப்போது இந்த மூன்றுமே ஏஐ  தொழில்நுட்பம் மூலம் செய்யப்படலாம் என்றும், பாடலை அவுட்புட்டாக  வழங்கலாம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ஐஐடி  மாணவர்கள், பாடல் கம்போஸ் செய்வதற்கான ஏஐ செயலியை உருவாக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "பாடல் கம்போசிங் செய்வதற்கான ஏஐ-யை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம், எந்த ராகத்தில், எந்த சூழ்நிலையில், எந்த விதமான மூட்டில் பாடல் வேண்டும் என்று கேட்டால், அது தானாகவே வழங்கும்.
 
அது மட்டுமன்றி, எந்த மூடில் பாட வேண்டும் என்று குறிப்பிட்டால்கூட, அதுவே ஆண் குரலா அல்லது பெண் குரலா என்பதை தேர்வு செய்து பாடி வழங்கும். தற்போது சில குறைகள் உள்ளன. அவற்றை சரிசெய்து வருகிறோம். விரைவில் முழுமையாக பாடலை கம்போஸ் செய்யும் ஏஐ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விடுவோம்" என்று தெரிவித்தனர்.
 
மேலும், "இதுவரை உலகத்தில் யாரும் கம்போஸ் செய்யாத தனித்துவமான ராகத்தில், வித்தியாசமான பாணியில் பாடல் வேண்டுமென்றாலும், அது உடனடியாக உருவாக்கி வழங்கும்" என்றும் கூறியுள்ளனர்.
 
இதனை தொடர்ந்து, "ஒரு பாடல் கம்போஸ் செய்வதற்கு ஏஆர் ரகுமானும், பாடலை எழுதுவதற்கு வைரமுத்துவும் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷனுக்கு தகுந்த பாடல் தேவையென்றால்,  தேவையான முழு விவரங்களை வழங்கினால், அதற்கேற்ப பாடலை உருவாக்கி விடும்" என அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்