வெளிச்சம் போட்டு காட்டியும் தன் தவறை உணராமல் அடம்பிடிக்கும் ஜூலி!

திங்கள், 24 ஜூலை 2017 (16:14 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்துவதோடு, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ஓவியாவை வெளியேற்ற சக போட்டியாளர்கள் பெரிதும் முயற்சி செய்து வந்தனர்.

 
இந்நிலையில் நடிகை ஓவியாவிற்கும், ஜூலிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் கமல் நெற்று வீடியோ  ஆதாரத்துடன் வெளியிட்டார். அனைவரும் பார்த்து புரிந்து கொண்ட நிலையில், ஜூலிமட்டும் அதனை மறுத்தார். ஜூலி விடாமல் தனது பொய்யை தொடர்ந்து கூறியதோடு, நீங்கள் போட்ட வீடியோவின் 5 வினாடி முன்னாடி ஓவியா அப்படி  கூறினார் என தெரிவித்தார். ஆனால் அப்படி எந்த வீடியோவும் எங்களிடம் இல்லை, எங்கள் கேமராக்களும் அப்படி எதுவும்  பதிவு செய்யவில்லை என கமல் கூறினார்.
 
இதனை தொடர்ந்து ஜூலி சாப்பிடாமல் அடம்பிடித்து, அந்த 5 வினாடி காட்சியை வெளியிட்டால் ஓவியா பேசியது தெரியவரும்  என்று கதறி அழுதார். நேற்றைய ப்ரொமோ வீடியோவில் ஓவியா பேச முயற்சித்தும் ஜூலி விலகி விலகி போகிறார். ஓவியா ஜூலியிடம் பொய்க்கு மேல் பொய் சொல்லிட்டு இருக்குற ஜுலி வெளியே போனால் காரி துப்புவாங்க என்று கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்