“விஜய்யுடன் டான்ஸ் ஆட வேண்டும்…” பிரபல வாரிசு நடிகையின் ஆசை!

சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:30 IST)
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆனார்.

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்த முதல் படமான விருமன் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து அவர் தமிழ் சினிமாவின் வளரும் இளம் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது அவர் அளித்துள்ள நேர்காணலில் “நடிகர் விஜய் என்னுடைய கனவு நடிகர். அவரோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவருடன் இணைந்து டான்ஸ் ஆடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்